விடியலைத்தேடி...
பாகம்-02
By Hilmiya
ரஷீதின் ஃபோனிற்கு அழைப்பொன்று வந்திட , போனை அவசரவசரமாக கையிலெடுத்து யாரென்று நோக்குகிறான். அது வேறு யாருமில்லை... நிஸாவிடமிருந்தான அழைப்பாக இருந்தது.
"ஹலோ..."
" ஆஹ்... நிஸா... சொல்லுமா... "
" எப்புடி இருக்கீங்க??? புள்ளைகள் எங்க??"
" ஆஹ்... நீ போனதுல ஈந்து எனக்கு நிம்மதியே இல்லடி..... ஓன்ட நெனப்பாதான் ஈக்கிறன்.... குய்க்கா வரப்பாரு.."
" எனக்கு மட்டும் ஒங்கட நெனப்பில்லாமலா? ஒங்களையும் விட்டுப்பிரிஞ்சி புள்ளைகளையும் பாக்காம இருக்குறத நெனச்சா செத்துடலாம்னு தோனுது... மனச கல்லாக்கிட்டு ஈக்கிறன்... அது சரி.. எங்க ஏன்ட செல்லகுட்டி அம்மு... பால்குடி மறக்க முன்னாடியே விட்டுட்டு வந்துட்டன்... மனசெல்லாம் பாரமா இருக்கு..." ( நிஸாவின் செல்ல மகள் தான் அம்னா.. அவளை செல்லமாக அம்மு என்றுதான் அழைப்பாள்)
"நிஸா... நீ சாப்டியா?? இந்த மாச சம்பளத்த காணம்... அம்முக்கு பால்மா வாங்கனும்..."
" இன்டைக்கிதான் சம்பளம் தந்தாங்க... நாளைக்கி போட்றன்.... அம்மு என்ன பண்ணுது... அடம்புடிக்கிறாளா??"
" ஆஹ் நாளைக்கி மறக்காம சல்லிய போட்டுடு தங்கம்..."
" சரிங்க... ஒடம்பெல்லாம் அடிச்சிப்போட்டாப்போல வலிக்கிது... இங்க வேல கூட... ரொம்ப கஷ்டமா இருக்கு..."
" ஆஹ்... நல்லா ரெஸ்ட் எடுடா... கொஞ்சம் ஒடம்ப பாத்துக்க... மறக்காம அம்முக்கு பால்மா வாங்க சல்லி போட்டுடு..."
" சரிங்க... புள்ளைய கொஞ்சம் காட்டுங்களே..."
" ஹலோ.... ஹலோ.... ஷிட் கவரேஜ் இல்லடி... நான் வெச்சிட்றன்.... " என்று ஃபோனை கட் பண்ணிவிடுகிறான் ரஷீத்.
" அல்லாஹ்... நான் இங்க வந்து ரெண்டு மூணு மாசமாகுது... இன்னும் புள்ளைகளோட பேசல்ல... இவரும் காட்றாரும் இல்ல... ஒருவேள புள்ளைகள் தூங்கிருக்கும் போல..." என்று மனதிற்குள் எண்ணியவளாக தலையணையில் தலை சாய்க்கிறாள்... இரு விழியோரங்களிலும் தன் செல்வங்களைக்காணத... குரல்களைக் கேட்காத ஏக்கத்தின் வடிவாய் கண்ணீர் துளிகள் வழிந்தோடின...
விடிந்ததும் வீட்டிற்கு வந்த ரஷீத் குளித்து விட்டு அவசரமாக வெளிக்கிளம்ப முனைந்தவனிடம்
" ரஷீத்... எங்க போக பாக்குற... புள்ளைகள் ஈக்கிறது நெனவீக்கிறா... அம்முக்கு பால்மா வாங்கனும்... மகன நேசரில சேக்கனும்... எங்க மருமகள் சல்லி போடல்லயா..." என்று ரஷீதின் தாய் வினவ
" எங்கமா... இன்னும் சல்லி போடவே இல்ல.... நான்தான் அஞ்சு பத்துன்னு அங்கால கடைகள்ல நின்டு சம்பாதிக்கிறன்..."
" என்னடா சொல்ற... அந்த புள்ள அப்புடி செய்யாதே... இன்னேரத்துக்கு அனுப்பிருக்குமே..."
" இருக்கும்... இருக்கும்.... வெளிநாட்டுக்கு போனா... இவள்களுக்கு தலகால் புரியாம ஆட்றே... புள்ளைகள்ட நெனப்பெங்க அவளுக்கு வரப்போற... நல்லா கூத்தடிக்கிறா ஈக்கும்..." என்று அவனது தங்கச்சி புலம்ப
" ஏய்... என்னடி பேசுற நீ.... ஓன்ட வேலைய மட்டும் பாரு... " என்று வன்மையாக கடிந்து கொண்டான் ரஷீத்...
" ஓஹ்... அவள் ஒன்ன அவட முந்தானைல போட்டு முடிஞ்சி வெச்சீக்கிறா போல...." என்று புலம்பிக்கொண்டே உள்ளே சென்றுவிடுகிறாள்.
" உம்மா... புள்ளைகள பாத்துக்கோங்க.... நான் கொஞ்சம் வெளிய போய்வாரன்..."
என்று கூறிக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்த அம்முவை ஆரத்தழுவி முத்தமிட்டுவிட்டு சென்றுவிடுகிறான்...
ரஷீதின் ஃபோன் அலறல் சப்தம் கேட்டு ரஷீதின் தாய் சப்தம் வரும் திசையை நோக்கிச்செல்கிறாள்....
தொடரும்.....

Comments
Post a Comment