விடியலைத் தேடி
விடியலைத்தேடி.....
பாகம் - 01
BY Hilmiya
"ரஷீத்.... கல்யாணமாகி ரெண்டு புள்ளையுமாகிட்டு.... இன்னும் வருமானத்துக்கு ஒரு வழியக்கானம்" என்று கூறியவளாக உமருன்னிஸா தன் கணவனருகே வந்தமர்ந்துகொண்டு அவன் கைகளைப்பற்றி அவன் தோளில் கவலை தோய்ந்த முகத்துடன் சாய்ந்து கொள்கிறாள்.
" நானும் தேடிட்டுத்தான்மா இருக்கன்... என்னதான் செய்ரன்டு வெலங்குதில்ல நிஸா.." ( ரஷீத் உமருன்னிஸாவை செல்லமாக நிஸா என்று தான் அழைப்பான்... அவள் குடும்பத்தாரும் கூட..)
"ஏய்.... "என்று தயக்கத்துடன் நிஸா இழுக்க
"என்னடா...." என்று செல்லமாக அவள் முகத்தைப் பார்த்து அவள் கன்னங்களை வருடியவனாக வினவ
" அதில்லப்பா... எனக்கொரு ஐடியா தோனுது...."
" ஆஹ் சொல்லுமா..."
" அது... "
" நிஸா சொல்லுமா...."
" இல்லங்க.... நான் வெளிநாட்டுக்கு போகலாம்னு யோசிக்கிறன்.. மகன் ஸ்கூல் போற வயசாகுது... மகளுக்கும் ஒரு வயசாகுது.... எந்த வருமானமுமில்லாம குடும்பத்த கொண்டு போறது கஷ்டம்பா...."
" என்ன நிஸா...." என்று கோபத்துடன் பேச முனைந்த ரஷீதின் வாயில் தன் ஆள்காட்டி விரலை வைத்து எதுவும் பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்தாள்.
எப்படியோ தன் கணவனை சமாதானம் செய்து தன் குடும்ப வருமானத்திற்காக தன் ஒரு வயது மகளையும் மகனையும் ரஷீதின் பொறுப்பிலிட்டு விட்டு நாடு கடந்து பயணமாகிறாள் நிஸா.
தாயின் பிரிவைக்கூட உணர்ந்திராத வயதை உடைய பச்சிளம் பிள்ளைகள் தான் ரஷீதின் பிள்ளைகள்.
நாட்கள் சில உருண்டோடின. நிஸாவிடமிருந்து முதல் மாத சம்பளம் வந்தது. பிள்ளைகளுக்கு சில இனிப்புப்பண்டகளை வாங்கிக்கொடுத்து விட்டு வெளியே சென்றான்.
"வாப்பா... "என்று ஓடிக்கொண்டு பின்னாலே சென்றாள் அவன் குட்டி மகள். அதைக் கூட பொருட்படுத்தாது சென்று விடுகிறான்.
"இவன் எங்க தான் இந்த மாதிரி கெளம்பிப்போறானோ... இந்த புள்ளைகளோட ஈக்கோனும் என்டு இவனுக்கு ஆச இல்லியா....பாவம் புள்ளைகள் வாப்பாவும் கூட ஈக்கிறல்ல... மருமகளும் இல்ல... " என்று கவலையுடன் தனக்குள் கூறிக்கொண்டு ரஷீதின் பிள்ளைகளை அணைத்து தூக்கிக்கொண்டு உள்ளே செல்கிறாள் ரஷீதின் தாய்.
மாதா மாதம் நிஸாவிடமிருந்து காலதாமதமின்றி பணம் வந்தது.. ரஷீதின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. வீட்டிற்கு செல்வதையும் பிள்ளைகளுடன் நேரத்தினை கழிப்பதனையும் குறைத்துக்கொள்கிறான்... அவனது அதிகமான நேரங்கள் வெளியே தான் கழிந்தன.
தொடரும்......

Comments
Post a Comment