விடியலைத் தேடி....
பாகம்-03
BY Hilmiya
ஃபோனின் பட்டனை அழுத்தி காதில் வைத்த அடுத்த கனமே கையிலிருந்த ஃபோனை ரஷீத் பறித்தெடுத்து தன் தாயை சமாளிப்பதுபோல் ஒரு சிரிப்பினை காட்டிவிட்டு கதைக்கும் சப்தம் உள்ளே போகாதவாறு போனின் கீழ்ப்பகுதியை தன் கைகளால் அழுத்திப்பிடித்து
" உம்மா... அது நான் வேல செய்ற கடைட மொதலாளிதான் கோல் பண்ணீக்கிறாரு... வேறு யார் சரியும் பேசினன்டா.. மொதலாளி நெனைக்கும் நான் வேலைக்கி கள்ளம் என்டு..."
" ஆஹ்... அப்டியாப்பா... நான் என்னமோ ஏதோன்னு நெனச்சுட்டன்...." என்று பெருமூச்சு விட்டவளாக
" மகன்... மொதலாளி லைன்ல ஈக்கிறாரு.. நீங்க பேசுங்க வாப்பா..."
" ஆஹ்... சரிமா.. சரிமா..."
ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற ரஷீத் " ஹலோ.... நிஸா..."
" என்னங்க... எவ்ளோ நேரமா... ஃபோன் ஆன்ஸர் பண்ணிட்டு பேசாம ஈக்கிறீங்க.."
" ஆஹ்... அதுவாடா.... அம்மு கீழ விழுந்துட்டாள் போல ஒரே அழுக... அதான் கடைக்கி போய் சொக்லட் வாங்கிட்டு வந்து கொடுத்து அழுகைய நிப்பாட்டினன்.... நீ கோல் எடுத்தத கூட மறந்துட்டன்னா பாத்துக்கோவே...."
" அல்லாஹ்... ஏன்ட தங்கத்துக்கு பலமா அடிபட்டயா??? வீடியோ கோலொண்டு எடுங்களே... ஏன்ட புள்ளைய பாக்கோனும்..."
" நிஸா... நான் புள்ளைய கவனிக்கிறல்லன்டு சந்தேகப்பட்றியா??
" ரஷீத்... ஏன்பா அப்டி நெனைக்கிறீங்க... புள்ளைகள பாக்கோனும் போல இருக்கு.. அதுதான்.. வேறோன்னுமில்ல..."
"நான் வெளியில நிக்கிறன்டா... வீட்ட போனதும் வீடியோ கோல் பண்றன்... அது சரி... சல்லி போட்டுட்டியா??"
" ஆஹ்... அத சொல்ல கோல் பண்ணிட்டு என்னமோ பேசிட்டீக்கிறன்... நான் ஒரு மண்டு தான்... ம்... போட்டாச்சி.."
" ஓகே... நான் வெச்சிட்றன்...." என்றவனாக நிஸாவின் மறு வார்த்தைக்கு காத்திராது போனை கட் பண்ணி விடுகிறான்.
ஏ.டி.எம் சென்று சல்லியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்கள், மரக்கறி எல்லாம் எடுத்தவனாக ஆட்டோ ஒன்றினைப்பிடித்து தெரு முனையில் இருக்கும் கதீஜாவின் வீட்டிற்கு செல்கிறான்.
" என்ன லேட்டாகிட்டீங்க... சரி வாங்க... "
" எங்க... இவள் சல்லி போட லேட்டாகிட்டு..."
" ஹ்ம்.... வீடக்கொஞ்சம் செய்யனும்... எப்டித்தான் ஈக்கிறன்டு பாருங்களே..."
" சரிடி... அதெல்லாம் நான் பாத்துக்குறன்... ஸ்ட்ரோங்கா டீ போட்டுட்டு வா...."
" ஆஹ்... இதோ வந்துட்றன்..."
( நிஸா வெளிநாடு சென்றதும் தனக்கென மார்க்க வரையறைகளை மீறி தேடிக்கொண்ட துணைதான் கதீஜா)
" எப்பதான் என்ன கல்யாணம் பண்ணிக்கொள்வீங்க..."
" அதுக்கென்னடி அவசரம்...."
" அவசரம் தான்.... எத்தனைக்கிதான் லைசன்ஸ் இல்லாம வாழ்றது...."
" கொஞ்ச நாளைக்கி பொறுமையா இரேன்டி.... " என்று கூறிக்கொண்டே அவளை அருகே இழுத்து கட்டியணைத்துக்கொண்டான்....
" பொல்லாத மனுஷன் எப்டி சரியும் சமாளிச்சிடுவாறு...."
" ஏய்... எதுவும் பேசாத.... "
" ஹ்ம்...." என்று பொட்டிப்பாம்பு போல் அவனுக்குள் சங்கமமாகினாள்.
( ரஷீதின் வீடு)
அம்மு பசி தாங்க முடியாமல் வீறிட்டு அழத்தொடங்கிவிடுகிறாள்... ரஷீதின் தாய் தான் ஓடிவந்து அம்முவை தூக்கி அழுகையை நிப்பாட்ட முனைகிறாள்... அவளால் முடியவில்லை.... உடனே கடைக்கு சென்று கடனுக்கு பால்மா பக்கெற்றொன்று எடுத்துவந்து பேத்தியின் பசியாற்றுகிறாள்.
கையில் சில இனிப்புப் பண்டங்களை எடுத்துக்கொண்டு உள்ளே சப்தமின்றி நுழைந்த ரஷீதைக்கண்ட மகள் வாப்பும்மாவின் மடியிலிருந்து கீழிறங்கி வாப்பாவின் காலை ஓடிச்சென்று கட்டியணைக்கிறாள்.
மகளின் அழகிய வதனம் தான் அவன் மனதின் கொள்ளை அன்புக்கு வித்திடுகிறது என்பது அவளுக்கு புரியவா போகிறது.
" செல்லக்குட்டி.... பால் குடிச்சீங்களா?? வாப்பா என்ன வாங்கி வந்தீக்கிறன்டு பாருங்க..."
வாப்பா என்கின்ற வார்த்தையை தவிர எதனையும் உச்சறித்தாடாத அப்பச்சிளம் ஏதோ தனக்கு தெரிந்த பாஷைகளால் தன் மகிழ்ச்சியை தந்தைக்கு தெரிவிக்க முனைகிறது.
அவளது குறும்புத்தனமான பேச்சும் கள்ளச்சிரிப்பும் அவனையே மறந்து அவளுடன் நீண்ட நேரம் இருந்திடச்செய்துவிடுகிறது.
" வாப்பா..." என்று கூறிக்கொண்ட செல்ல மகன் ரஷீதின் பிடறியைக் கட்டியணைக்கும் வரை... தன்னையே மறந்து மகளுடன் கொஞ்சி விளையாடுகிறான் ரஷீத்..
புள்ளைகளோடு காலம் கடத்தியதால் நேரம் போனது கூட ரஷீதிற்கு விளங்கவில்லை... கதீஜாவிடமிருந்தான ஃபோன் அழைப்பு வரவும் உடனே எழுந்து வெளியேற முற்பட்டவனை ரஷீதின் தாய் வழிமறித்த...
" எங்க போறீங்க... சரியா இந்த டைமுக்கு வெளிய போயிட்றீங்க...."
" அதில்லமா... கொஞ்சம்..." ரஷீதின் வார்த்தைகளுக்கு மதிப்பளியாது
" அங்க பாருடா... ஓன்ட புள்ளைகள... ஒன்னையே பாத்துட்டு ஈக்குதுகள்... இப்டி எடைல விட்டுட்டு போறளவுக்கு ஒனக்கென்ன வேல?? என்னதான் ஈந்தாலும் பிர்ச்சின இல்ல... புள்ளைகளுக்கு சாப்பாட குடுத்துட்டு நீயும் சாப்டுட்டு பேசாம தூங்கு...."
மறு வார்த்து எதுவும் கூறாது புள்ளைகளுக்கு சாப்பாடைக் குடுத்துவிட்டு ஃபோனையும் சைலன்ட்டில் போட்டுவிட்டு உறங்கிவிடுகிறான்...
தொடரும்....

Comments
Post a Comment